- தமிழறிஞர்களும் மொழியலாளர்களும் தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை
- சங்க காலம் (கிமு 400 – கிபி 300)
- சங்கம் மருவிய காலம் (கிபி 300 - கிபி 700)
- பக்தி இலக்கிய காலம் (கிபி 700 - கிபி 1200)
- மையக் காலம் (கிபி 1200 - கிபி 1800)
- தற்காலம் (கிபி 1800 - இன்று வரை)
- பக்தி இலக்கிய காலத்திலும், மையக் காலத்திலும் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன.
- பிற்காலத்தில் பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள் முதலான தூய்மைவாதிகள் இவற்றைத் தமிழிலிருந்து நீக்க உழைத்தனர்.
- இவ்வியக்கம் தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது.
- இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், அறிவியல் எழுத்துக்களிலும் வடமொழிக் கலப்பில்லாத தமிழ் பயன்பட வழியேற்பட்டது.
- கி. பி. 800இற்கும் 1000இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது.
0 comments:
Post a Comment