பெயர்ச்சொல்:
- பொருள் விளங்கச் சொல்வது பெயர்ச்சொல்
- பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும். ஆதலால் பெயர்ச்சொல்
- பொருட் பெயர்
- இடப் பெயர்
- காலப் பெயர்
- சினைப் பெயர்
- பண்புப் பெயர்
- தொழிற் பெயர்
என்று ஆறு வகைப்படும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைப் பொருளாதி ஆறு என்றும், பொருள் முதலாறு என்றும் கூறுவர்.
உதாரணம் :மரம், கண், பெண் – பெயர்ச்சொல்
0 comments:
Post a Comment