- எழுத்து இலக்கணத்தில், எழுத்துகளின் வகைகள், அவை ஒலிக்கும் கால அளவு, எழுத்துகள் பிறக்கும் முறை ஆகியனவும் சந்தி இலக்கணமும் இடம்பெற்றுள்ளன.
- சந்தி இலக்கணம் என்பது இரண்டு சொற்கள் சேரும்போது முதல் சொல்லின் கடைசி எழுத்திலும் இரண்டாம் சொல்லின் முதல் எழுத்திலும் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லுவது ஆகும்.
- தமிழ் இலக்கண நூல்களில் எழுத்து என்ற சொல் மொழியில் வழங்கும் ஒலிகளைக் குறிக்கவும், அவ்வொலிகளுக்குரிய வரிவடிவத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- அவ்வகையில் “அ“ என்ற எழுத்து ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டையும் குறித்து நிற்கின்றது
- முதலெழுத்து, சார்பெழுத்து என்பன மொழியில் எழுத்து தனித்தன்மை, சார்புத்தன்மை குறித்த பாகுபாடுகள்.
- உயிரெழுத்து, மெய்யெழுத்து என்பன அவற்றின் இயங்கு-தன்மை குறித்த பாடுபாடு. மெய் தனித்து இயங்காது.
- குறில், நெடில் எனபன எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு பற்றியவை.
- வல்லினம், மெல்லினம், இடையினம் என்பன எழுத்தின் பிறப்பிடத்தால் ஒலிப்பில் தோன்றும் வன்மை, மென்மை, இடைமை பற்றியவை.
- சுட்டு, வினா என்பன மொழியிடை வரும் இடைச்சொல்லாகிப் பொருள் உணர்த்தும் எழுத்துக்கள். தனிநிலையில் இவை பொருள் உணர்த்துவது இல்லை.
- மயங்கும் எழுத்துக்கள், மயங்கா எழுத்துக்கள் என்பவை நாவால் ஒலிக்கமுடியும் எழுத்துக்களையும், ஒலிக்கமுடியாத எழுத்துக்களையும் குறிப்பன.
முதலெழுத்து:
- 'அ' முதல் 'ஔ' வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்' முதல் 'ன்' வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்.
- உயிரெழுத்துகள்: உயிரெழுத்துகள் 12 அவை அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ.
- ஃ-என்பது ஆய்த எழுத்து ஆகும் .
- உயிரெழுத்துகள் குறில், நெடில் என இரண்டு வகைப்படும்.
- உயிரெழுத்துக்களின் சிறப்புகள் :
- உயிரெழுத்து தனித்து இயங்கிச் சொல் ஆகும் (ஈ, மா, வை)
- உயிரெழுத்து இல்லாத சொல் எந்த மொழியிலும் இல்லை
- மெய்யெழுத்து தனித்து இயங்கிச் சொல் ஆவது இல்லை. உயிரோடு இணைந்துதான் சொல் ஆகும்.
- நெடில் எழுத்துக்கள் : உயிரெழுத்துக்களில் நெடிய ஒலிப்புக் கால அளவு அதாவது இரண்டு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழும் இவை முறையே 18 மெய்யெழுத்துக்களுடன் புணர்வதால் உருவாகும் உயிர்மெய்யெழுத்துக்களும் நெடில் எழுத்துக்கள் அல்லது நெட்டெழுத்துக்கள்என வழங்கப்படுகின்றன.
- குறில் எழுத்துக்கள் : உயிரெழுத்துக்களில் குறுகிய ஒலிப்புக் கால அளவு அதாவது ஒரு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும் இவை முறையே 18 மெய்யெழுத்துக்களுடன் புணர்வதால் உருவாகும் உயிர்மெய்யெழுத்துக்களும் குறில் எழுத்துக்கள் அல்லது குற்றெழுத்துக்கள் என வழங்கப்படுகின்றன.
- மெய்யெழுத்துகள்: மெய்யெழுத்துகள் 18 அவை க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்.
- மெய்யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று வகைப்படும்.
நன்றி தமிழா.........................
ReplyDeletenice
ReplyDelete