Wednesday, November 23, 2016

வினைச்சொல் என்றால் என்ன?

வினைச்சொல்:

  •          தொழிலின் காலம் காட்டும் சொல் வினைச்சொல்.
  •    உதாரணம் :படித்தான்படிக்கிறான்படிப்பான் – வினைச்சொல்
           வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை (செயலை) உணர்த்துவதாகும். எ.கா கண்ணன் ஓடினான் என்ற தொடரில் ஓடினான் அல்லது ஓடுதல் வினைச்சொல்லாகும். பழம் மரத்தில் இருந்து வீழ்ந்தது என்ற வசனத்தில் வீழ்ந்தது அல்லது வீழ்தல் வினைச்சொல்லாகும். முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும். முடிவு பெறாத வினைச்சொல் எச்சம் எனப்படும்.
முற்று இருவகைப்படும். அவை
  • தெரிநிலை வினைமுற்று
  • குறிப்பு வினைமுற்று
எச்சம் இரண்டு வகைப்படும். அவை
  • பெயரெச்சம்
  • வினையெச்சம்
Share:

1 comment:

Blog Archive