திருக்குறள்
- திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும்.
- உலகபொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.
- இதனை இயற்றியவர் கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கும் கி.மு.1 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார்.
- திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல்.
- மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. எதுவிதத்திலும், திருக்குறளை இயற்றியவர் பற்றியும், அது என்ன நூல் என்பது பற்றியும், ஔவையாரால் இயற்றப்பட்டதாகக் கூறப்படும் நல்வழி என்பதன் இறுதிப்பாட்டுப் பின்வருமாறு கூறுகிறது:
- தேவர் குறளும் திரு நான்மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகம் என்றுணர்
- இதில் 'தேவர் குறள்' எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும், குறள், திருநான்மறை, ஏனையவைகளும் 'ஒரு வாசகம்' எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும், தமிழ் வித்தகர்கள் தெளிவான விளக்கத்தைக் கொடுக்காத நிலை தொடர்கிறது.
- திருக்குறள் நூலானது வடமொழியில் எழுதப்பட்டவைகளின் அடிப்படையில் இயற்றப்பட்டது என ஒரு சாராராலும், அது திருவள்ளுவனின் சுய சிந்தனை அடிப்படையில் தமிழ் மொழியில் இயற்றப்பட்டது என மற்றொரு சாராராலும் கருதப்படுகிறது.
- மேலும், திருக்குறளில் கூறப்பட்டிருப்பவைகள் உலகின் பல்வேறு சமயங்கள் வலியுறுத்துபவையுடன் ஒப்பிடப்பட்டு, அது பல்வேறு சமயங்களுடனும் பொருந்துவதாகப் பல்வேறு சமயத்தாராலும் கருதப்பட்டு வருகிறது.
வரலாறு :
- திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது.
- இதன் அடிப்படையில், "திருவள்ளுவர் ஆண்டு" என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.
பெயர்க்காரணம் :
- இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் அதன் உயர்வு கருதி "திரு" என்ற அடைமொழியுடன் "திருக்குறள்" என்றும் பெயர் பெறுகிறது.
- எதுவித்திலும், ”குறள்” என்ற தமிழ்ச் சொல்லின் பொருள்கள் எவை என்பதை இன்றுவரை தமிழ் வித்தகர்கள் அறியவில்லை. இதற்குக் காரணம், முன்னைய, இன்றைய தமிழ் வித்தகர்கள் தொல்காப்பியன் உரியிலில் குறிப்பிட்ட”மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா” எனக் கூறிய சூத்திரத்தையும், அதற்கு நச்சினார்க்கினியர், சேனாவரையர் எழுதியிருந்த உரைகளையும் சரியாக விளங்கி, ஒர தமி்ச் சொல் எக்கடிப் பொருள் உணர்த்துகிறது என்பதைச் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை.
- குறளானது ஈரடிகளில் உலகத் தத்துவங்களை சொன்னதால், இது ‘ஈரடி நூல்’ என்றும், அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால், ‘முப்பால்’ என்றும் அழைக்கப்படுகிறது.
பிற பெயர்கள்
1.
உத்தரவேதம்
2.
பொய்யாமொழி
3.
வாயுரை வாழ்த்து
4.
தெய்வநூல்
5.
பொதுமறை
6.
முப்பால்
7.
தமிழ் மறை
8.
ஈரடி நூல்
9.
வான்மறை
இந்நூல்
அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும்
முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும், அழகுடன் இணைத்தும், கோர்த்தும் விளக்குகிறது.
நூற் பிரிவுகள்
- திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையான அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.ஆனால், குறளின் அதிகாரங்கள் ஊன் 10 குறள்களைக் கொண்டுள்ளன என்பதற்கான விளக்கத்தினை இன்றைய ஆய்வாளர்கள் அறியவில்லை.
- திருக்குறளில் "பாயிரம்" என்னும் இயலில் நான்கு அதிகாரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் முதலாவது , "கடவுள் வாழ்த்து" என்னும் அதிகாரம். அதைத்தொடர்ந்து, "வான் சிறப்பு", "நீத்தார் பெருமை", "அறன் வலியுறுத்தல்" ஆகிய அதிகாரங்கள்.
அறத்துப்பால்
திருக்குறளின்
அறத்துப்பாலில் பாயிரவியலைத் தொடர்ந்து முதலாவதாக 20 அதிகாரங்களுடன்
"இல்லறவியல்" அடுத்து 13 அதிகாரங்ள் கொண்ட துறவறவியல் இறுதியில் "ஊழ்"
என்னும் ஒரே அதிகாரம் கொண்ட "ஊழியல்" என வகைபடுத்தப் பட்டுள்ளது.
திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் "ஊழியல்" மட்டுமே.
முதற்பாலாகிய அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள்.
பொருட்பால்
அடுத்து
வரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள்
இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள்
உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களுமாக மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன.
காமத்துப்பால்
- கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலில்" களவியல் மற்றும் கற்பியல் என இரண்டு இயல்கள். களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களுமாக மொத்தம் 25 அதிகாரங்கள் உள்ளன. ஆகமொத்தம் 9 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார்.
- திருக்குறள் நூலமைப்பைப் பொறுத்தமட்டில், அது மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. பாயிரத்தில் வைக்கப்பட்டுள்ள நான்கு அதிகாரங்களுள் கடவுள் வாழ்த்து, அறன் வலியுறுத்தல், நீத்தார் பெருமை என்பவை மக்களின் முழு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாகவும், வான் சிறப்பு மட்டும் மக்களின் முழு கட்டுப்பாட்டிற்கு அப்பாற்ப்பட்டதாகவும் உள்ளது.
திருக்குறளும்
எண் குறித்த தகவல்களும்
- திருக்குறளின் மூன்று பால்களும், ஒவ்வொன்றிலும் 34 (பாயிரவியல் நீக்கி) , 70, 25 என்ற எண்ணிக்கையான அதிகாரங்கள் உள்ளதாக அமைக்கப்பட்டு, அந்த எண்களின் இலக்கங்களைக் கூட்டினால் 7 என்ற கூட்டெண் வரும் விதத்திலும் நூல் அமைக்கப்பட்டுள்ளது.
- மேலும், ஒட்டு மொத்த அதிகாரங்களான 133 இன் எண்களைக் கூட்டினாலும், கூட்டெண் 7ஆக வரும் விதத்திலேயே நூல் அமைக்கப்பட்டு்ள்ளது. ஒட்டு மொத்தத்தில், திருக்குறளின் நூலமைப்பானது 7 என்ற எண்ணுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது.
- அதேவேளையில், திருக்குறளின் நூலமைப்பானது 3, 4, 9, 10 என்ற எண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தே அமைக்கப்பட்டுள்ளது.
- இவை தற்செயலாக நடைபெற்றதா? இல்லையா? என்பது பற்றியும், இவ்வெண்கள் எங்கேனும் தமிழரின் வாழ்வியலில் நெறிமுறைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளனவா? இல்லையா? என்பது பற்றியும், இந்த எண்கள் ஒரு குறிப்பிட்ட போதனையில் முக்கியத்துவம் பெறுவதாக இருந்தால், அது எது என்பதையும் இன்றுவரை ஆய்வாளர்கள் ஆராய்ந்து, எதனையும் கூறவில்லை.
- மற்றைய புறத்தில், திருக்குறளின் ஆரம்பத்தில் வைக்கப்பட்டுள்ள நான்கு அதிகாரங்களும் என்ன அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளன, அவைகள் ஏதாவது போதனை அடிப்படையில்தான் வைக்கப்பட்டுள்ளனவா, இல்லையா என்பது பற்றியும் ஆய்வாளர்களால் ஆராயப்பட்டு, சரியான முடிவுக்கு வரப்படவில்லை.
நூற்பிரிவு :
அறத்துப்பால் (1-38)
- பாயிரம்
- 1. கடவுள் வாழ்த்து
- 2. வான் சிறப்பு
- 3. நீத்தார் பெருமை
- 4. அறன் வலியுறுத்தல்
- இல்லறவியல்
- 5. இல்வாழ்க்கை
- 6. வாழ்க்கைத் துணைநலம்
- 7. மக்கட்பேறு
- 8. அன்புடைமை
- 9. விருந்தோம்பல்
- 10. இனியவை கூறல்
- 11. செய்ந்நன்றி அறிதல்
- 12. நடுவுநிலைமை
- 13. அடக்கம் உடைமை
- 14. ஒழுக்கம் உடைமை
- 15. பிறன் இல் விழையாமை
- 16. பொறை உடைமை
- 17. அழுக்காறாமை
- 18. வெஃகாமை
- 19. புறங்கூறாமை
- 20. பயனில சொல்லாமை
- 21. தீவினை அச்சம்
- 22. ஒப்புரவு அறிதல்
- 23. ஈகை
- 24. புகழ்
- துறவறவியல்
- 25. அருள் உடைமை
- 26. புலால் மறுத்தல்
- 27. தவம்
- 28. கூடா ஒழுக்கம்
- 29. கள்ளாமை :
- 30. வாய்மை
- 31. வெகுளாமை
- 32. இன்னா செய்யாமை
- 33. கொல்லாமை
- 34. நிலையாமை
- 35. துறவு
- 36. மெய் உணர்தல்
- 37. அவா அறுத்தல்
- ஊழியல்
- 38. ஊழ்
- பொருட்பால் (39-108)
- அரசியல்
- 39. இறைமாட்சி
- 40. கல்வி
- 41. கல்லாமை
- 42. கேள்வி
- 43. அறிவுடைமை
- 44. குற்றம் கடிதல்
- 45. பெரியாரைத் துணைக்கோடல்
- 46. சிற்றினம் சேராமை
- 47. தெரிந்து செயல்வகை
- 48. வலி அறிதல்
- 49. காலம் அறிதல்
- 50. இடன் அறிதல்
- 51. தெரிந்து தெளிதல்
- 52. தெரிந்து வினையாடல்
- 53. சுற்றம் தழால்
- 54. பொச்சாவாமை
- 55. செங்கோன்மை
- 56. கொடுங்கோன்மை
- 57. வெருவந்த செய்யாமை
- 58. கண்ணோட்டம்
- 59. ஒற்றாடல்
- 60. ஊக்கம் உடைமை
- 61. மடி இன்மை
- 62. ஆள்வினை உடைமை
- 63. இடுக்கண் அழியாமை
- அமைச்சியல்
- 64. அமைச்சு
- 65. சொல்வன்மை
- 66. வினைத்தூய்மை
- 67. வினைத்திட்பம்
- 68. வினை செயல்வகை
- 69. தூது
- 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
- 71. குறிப்பு அறிதல்
- 72. அவை அறிதல்
- 73. அவை அஞ்சாமை
- அரணியல்
- 74. நாடு
- 75. அரண்
- கூழியல்
- 76. பொருள் செயல்வகை
- படையியல்
- 77. படைமாட்சி
- 78. படைச்செருக்கு
- நட்பியல்
- 79. நட்பு
- 80. நட்பு ஆராய்தல்
- 81. பழைமை
- 82. தீ நட்பு
- 83. கூடா நட்பு
- 84. பேதைமை
- 85. புல்லறிவாண்மை
- 86. இகல்
- 87. பகை மாட்சி
- 88. பகைத்திறம் தெரிதல்
- 89. உட்பகை
- 90. பெரியாரைப் பிழையாமை
- 91. பெண்வழிச் சேறல்
- 92. வரைவில் மகளிர்
- 93. கள் உண்ணாமை
- 94. சூது
- 95. மருந்து
- குடியியல்
- 96. குடிமை
- 97. மானம்
- 98. பெருமை
- 99. சான்றாண்மை
- 100. பண்புடைமை
- 101. நன்றியில் செல்வம்
- 102. நாண் உடைமை
- 103. குடி செயல்வகை
- 104. உழவு
- 105. நல்குரவு
- 106. இரவு
- 107. இரவச்சம்
- 108. கயமை
- களவியல்
- 109. தகையணங்குறுத்தல்
- 110. குறிப்பறிதல்
- 111. புணர்ச்சி மகிழ்தல்
- 112. நலம் புனைந்து உரைத்தல்
- 113. காதற் சிறப்பு உரைத்தல்
- 114. நாணுத் துறவு உரைத்தல்
- 115. அலர் அறிவுறுத்தல்
- கற்பியல்
- 116. பிரிவாற்றாமை
- 117. படர் மெலிந்து இரங்கல்
- 118. கண் விதுப்பு அழிதல்
- 119. பசப்பு உறு பருவரல்
- 120. தனிப்படர் மிகுதி
- 121. நினைந்தவர் புலம்பல்
- 122. கனவு நிலை உரைத்தல்
- 123. பொழுது கண்டு இரங்கல்
- 124. உறுப்பு நலன் அழிதல்
- 125. நெஞ்சொடு கிளத்தல்
- 126. நிறை அழிதல்
- 127. அவர் வயின் விதும்பல்
- 128. குறிப்பு அறிவுறுத்தல்
- 129. புணர்ச்சி விதும்பல்
- 130. நெஞ்சொடு புலத்தல்
- 131. புலவி
- 132. புலவி நுணுக்கம்
- 133. ஊடல் உவகை
0 comments:
Post a Comment