Saturday, January 28, 2017

ஆசாரக்கோவை (பதினெண்கீழ்க்கணக்குநூல்)


                                                    ஆசாரக்கோவை



  •     மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை.
  •  பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இது ஒரு நீதி நூல்.
  •  வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார்.
  • பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். 
  • ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விடயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது. இவ்வொழுக்கங்களின் பட்டியல்:

1. ஆசார வித்து
2. ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்
3. தக்கிணை முதலியவை மேற்கொள்ளல்
4. முந்தையோர் கண்ட நெறி
5. எச்சிலுடன் தீண்டத் தகாதவை
6. எச்சிலுடன் காணக் கூடாதவை
7. எச்சில்கள்
8. எச்சிலுடன் செய்யக் கூடாதவை
9. காலையில் கடவுளை வணங்குக
10. நீராட வேண்டிய சமயங்கள்
11. பழைமையோர் கண்ட முறைமை
12. செய்யாமல் தவிர்க்க வேண்டியவை
13. செய்யத் தகாதவை
14. நீராடும் முறை
15. உடலைப்போல் போற்றத் தக்கவை
16. யாவரும் கூறிய நெறி
17. நல்லறிவாளர் செயல்
18. உணவு உண்ணும் முறைமை
19. கால் கழுவிய பின் செய்ய வேண்டியவை
20. உண்ணும் விதம்
21. ஒழுக்கம் பிழையாதவர் செய்வது
22. பிற திசையும் நல்ல
23. உண்ணக்கூடாத முறைகள்
24. பெரியோருடன் இருந்து உண்ணும் முறை
25. கசக்கும் சுவை முதலிய சுவையுடைய பொருள்களை உண்ணும் முறைமை
26. உண்ணும் கலங்களைக் கையாளும் முறை
27. உண்டபின் செய்ய வேண்டியவை
28. நீர் குடிக்கும் முறை
29. மாலையில் செய்யக் கூடியவை
30. உறங்கும் முறை
31. இடையில் செல்லாமை முதலியன
32. மலம், சிறுநீர் கழிக்கக்கூடாத இடங்கள்
33. மலம் சிறுநீர் கழிக்கும் முறை
34. மலம், சிறுநீர் கழிக்கும் திசை
35. வாய் அலம்பாத இடங்கள்
36. ஒழுக்க மற்றவை
37. நரகத்துக்குச் செலுத்துவன
38. எண்ணக்கூடாதவை
39. தெய்வத்துக்குப் பலியூட்டிய பின் உண்க
40. சான்றோர் இயல்பு
41. சில செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும்
42. மனைவியைச் சேரும் காலமும் நீங்கும் காலமும்
43. உடன் உறைதலுக்கு ஆகாத காலம்
44. நாழி முதலியவற்றை வைக்கும் முறை
45. பந்தலில் வைக்கத் தகாதவை
46. வீட்டைப் பேணும் முறைமை
47 நூல் ஓதுவதற்கு ஆகாத காலம்
48. அறம் செய்தற்கும் விருந்து அளித்தற்கும் உரிய நாட்கள்
49. நடை உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல்
50. கேள்வியுடையவர் செயல்
51. தம் உடல் ஒளி விரும்புவார் செய்யத் தக்கவை
52. தளராத உள்ளத்தவர் செயல்
53. ஒழுக்கமுடையவர் செய்யாதவை
54. விருந்தினர்க்குச் செய்யும் சிறப்பு
55. அறிஞர் விரும்பாத இடங்கள்
56. தவிர்வன சில
57. நோய் வேண்டாதவர் செய்யக் கூடாதவை
58. ஒருவர் புறப்படும் போது செய்யத் தகாதவை
59. சில தீய ஒழுக்கங்கள்
60. சான்றோருடன் செல்லும் போது செய்யத் தக்கவை
61. நூல்முறை உணர்ந்தவர் துணிவு
62. சான்றோர்க்குச் செய்யும் ஒழுக்கம்
63. கற்றவர் கண்ட நெறி
64, வாழக்கடவர் எனப்படுவர்
65. தனித்திருக்கக் கூடாதவர்
66. மன்னருடன் பழகும் முறை
67. குற்றம் ஆவன
68. நல்ல நெறி
69. மன்னன் செய்கையில் வெறுப்படையாமை முதலியன
70. மன்னன் முன் செய்யத் தகாதவை
71. மன்னன் முன் சொல்லக் கூடாதவை
72. வணங்கக்கூடாத இடங்கள்
73. மன்னர் முன் செய்யத் தகாதவை
74. ஆசிரியரிடம் நடக்கும் முறைமை
75. சான்றோர் அவையில் செய்யக் கூடாதவை
76. சொல்லும் முறைமை
77. நல்ல குலப்பெண்டிர் இயல்பு
78. மன்னர் அவையில் செய்யக் கூடாதவை
79. பெரியோரிடம் உள்ள முச்செயல்கள்
80. சான்றோர் பெயர் முதலியவை கூறாமை
81. ஆன்றோர் செய்யாதவை
82. மனைவியின் உள்ளம் மாறுபடுதல்
83. கடைபோக வாழ்வோம் என எண்ணுபவர் மேற்கொள்ள வேண்டியவை
84. பழகியவை என இகழத் தகாதவை
85. செல்வம் கெடும் வழி
86. பெரியவரை உண்டது யாது என வினவக் கூடாது
87. கட்டிலில் படுத்திருப்பவருக்குச் செய்யத் தகாதவை
88. பெரியோர் போல் வாழ்வோம் என எண்ணுபவர் செய்கைகள்
89. கிடைக்காதவற்றை விரும்பாமை
90. தலையில் சூடிய மோத்தல்
91. பழியாவன
92. அந்தணரின் சொல்லைக் கேட்க
93. சான்றோர் அவையில் குறும்பு முதலியன செய்யாமை
94. ஐயம் இல்லாத அறிவினர் செய்கை
95. பொன்னைப் போல் காக்கத் தக்கவை
96. எறும்பு முதலியவை போல் செயல் செய்தல்
97, சான்றோர் முன் சொல்லும் முறை
98. புகக் கூடாத இடங்கள்
99. அறிவினர் செய்யாதவை
100. ஒழுக்கத்தினின்று விலகியவர்
Share:

திரிகடுகம் (பதினெண்கீழ்க்கணக்கு நூல்)

                                                                திரிகடுகம்


  •     திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்.
  •  திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்குமிளகுதிப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 
  • 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. 
  • இதன் ஒவ்வொரு பாடலிலும் இம்மூவர் அல்லது இம்மூன்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  உதாரணம் :      
ஒருவன், உயர்வும் ஊக்கமும் பெறவேண்டுமானால், உலகத்தோடு எப்படி ஓட்ட ஒழுகவேண்டும் என்பது பற்றி, கூறும் 56வது பாடல்

முந்தை எழுத்தின் வரவுணர்ந்துபிற்பாடு
தந்தையும் தாயும் வழிபட்டு –வந்த
ஒழுக்கம் பெருநெறி சேர்தல் இம்மூன்றும்
விழுப்ப நெறி தூராவாறு
பிறர் தன்னை உயர்த்தி பேசும் பொழுது இது தகாது என்று நாணுதலும், தன்னை விரும்பாதவர் தன்னை இகழுமிடத்து வெகுளாமல் பொறுத்தலும், மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல் உதவி செய்தலும் சிறந்த செல்வமாகும் என்னும் வாழ்வியல் உண்மையை சொல்லும் 6வது பாடல்
பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்
திறன்வேறு கூறிற் பொறையும்—அறவினையைக்
காராண்மை போல வொழுகலும் இம்மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்கு.
Share:

களவழி நாற்பது (பதினெண்கீழ்க்கணக்கு நூல்)

                                                 களவழி நாற்பது


  • பதினெண்கீழ்க்கணக்கு நூற் தொகுப்பில் உள்ள நூல்களுள் புறப்பொருள் கூறுகின்ற ஒரே நூல் களவழி நாற்பது. சோழ மன்னனான கோச்செங்கணானுக்கும், சேரமான் கணைக்காலிரும்பொறைக்கும் இடையே கழுமலத்தில் இடம் பெற்ற போரின் பின்னணியில் எழுதப்பட்டது இந் நூல்.
  •  இதை எழுதியவர் பொய்கையார் என்னும் புலவர். இவர் சேர மன்னனுடைய நண்பன். நடைபெற்ற போரில் சேரன் தோற்றுக் கைதி ஆகிறான்
  • . அவனை விடுவிக்கும் நோக்கில் பாடப்பட்டதே இந் நூல் எனக் கருதப்படுகின்றது.
  • இதிலுள்ள நாற்பது பாடல்கள் அக்காலத்துப் போர்க்களக் காட்சிகளையும், சோழனும் அவனது படைகளும் புரிந்த வீரப் போர் பற்றியும் கவி நயத்துடன் எடுத்துக்காட்டுகின்றன.
  • இந்நூலிலுள்ள மிகப் பெரும்பாலான பாடல்களில் யானைப் படைகள் குறிப்பிடப்படுவது அக்காலத்தில் போர்களில் யானைப் படைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது எனலாம்.
       களவழி: 
  •         நெல் முதலான விளைச்சலை அடித்து அழி தூற்றும் களத்தைப் பாடுவது 'ஏரோர் களவழி'. பகைவரை அழிக்கும் போர்க்களத்தைப் பாடுவது 'தேரோர் களவழி'  தேரோர் களவழியைப் பாடும் நூல் களவழி நாற்பது.
  •  இந்தக் களவழி பெரும்பாலும் மரபுவழிச் செய்திகளையே தருகிறது. கழுமத்தில் நடைபெற்ற போரைப் பற்றி கொடூரமான வர்ணனைகளையும் செய்கிறது. 
  • சோழ மன்னன் செங்கணான் சேரமன்னன் கணக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டான் என்றும், புலவர் பொய்கையார் செங்கணான் போரைச் சிறப்பித்துப் பாடி அதற்குப் பரிசாகச் சேரனை மீட்டார் என்றும் கூறப்படுகிறது.

         போர்க்களம்:

  • போர் 'திருப்போர்ப்புறம்|திருப்பூர்' என்னுமிடத்தில் நடைபெற்றதாகப் புறநானூற்றுப் பாடலின் அடிக்குறிப்பு தெரிவிக்கிறது. 
  • களவழி நாற்பதுக்கு உரை எழுதியோர் கழுமலம் என்னும் என்னும் ஊரில் நடைபெற்றதாகக் குறிப்பிடுகின்றனர்.
  • புறநானூற்றுக் கணைக்கால் இரும்பொறை சிறைச்சாலையில் உயிர் துறந்தான்.
  • களவழி நாற்பது நூலின் கணைக்கால் இரும்பொறை சிறையிலிருந்து மீட்கப்பட்டான்.
   உதாரணம் :
       சினங்கொண்ட சோழன் செங்கணான் போர் புரிகின்ற களத்திலே, தச்சனுடைய தொழிற்சாலையில் பொருட்கள் இறைந்து கிடப்பதைப்போல, கொலைவெறி கொண்டு பாய்கின்ற யானைகள் புகுந்த இடமெல்லாம் பிணங்கள் விழுந்து கிடக்கின்றன என்னும் பொருள்படுவது கீழே காணப்படும் பாடல்.
கொல்யானை பாயக் குடைமுருக்கி யெவ்வாயும்
புக்கவா யெல்லாம் பிணம்பிறங்கத் - தச்சன்
வினைபடு பள்ளிறிய் றோன்றும் செங்கட்"
சினமால் பொருத களத்து.
Share:

இனியவை நாற்பது ( பதினெண்கீழ்க்கணக்கு நூல்)

                                            இனியவை நாற்பது 


  • பூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது.
  •  இது நாற்பது வெண்பாக்களினால் ஆனது. பண்டைக்காலத் தமிழ்நூல் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. 
  • உலகில் நல்ல அல்லது இனிமையான விடயங்களை எடுத்துக்கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம்.
  • ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகின்றது.

எடுத்துக்காட்டு
  • சுற்றியிருப்பவர்களுக்குக் கல்வி கற்பித்தல் மிகவும் நல்லது; 
  • கற்றறிந்த பெரியோர்களைத் துணை கொண்டு வாழ்தலும் மிக நன்று; 
  • சிறிய அளவிலாயினும் தேவைப்படுபவர்களுக்குக் கேட்காமலேயே கொடுப்பது எப்பொழுதுமே நல்லது என்னும் பொருள்படும் இந்நூற் பாடலொன்று பின்வருமாறு:

    சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
    மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
    எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
    எத்துணையும் ஆற்ற இனிது.
  • இது போல் இந்நூலில் 124 இனிய சொற்கள் கூறப்படுகின்றன. 
  • இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நான்கு நாற்பது பாடல்களைக் கொண்ட நூல்களில் இரண்டாவதாகும்.
           
 
ஆசிரியர்  வரலாறு :
           இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எனப்படுவர்.
          இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன். இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு.           இவர் சிவன், திருமால், பிரமன் முதலிய மூவரையும் பாடியுள்ளார். ஆதலால் இவரின்          சமயம் வைதீகமாகும். 
        இவர் சர்வ சமய நோக்குடையவராயிருந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.
        இவர் பிரமனைத் துதித்திருப்பதால் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியவர்            என்பதோடு, இன்னா நாற்பதின் பல கருத்துக்களை அப்படியே எடுத்தாளுவதால் இவர் அவருக்கும் பிந்தியவர் எனலாம். அதனால் இவரது காலம் கி.பி.725-750 எனப்பட்டது.

        நூற்குறிப்பு :
           

  •   இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 செய்யுட்களைக் கொண்டது.
  • இவற்றுள்,      'ஊரும் கலிமா' எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டுமே (8) பஃறொடை வெண்பா.     ஏனைய அனைத்தும் இன்னிசை வெண் பாவினால் ஆக்கப்பட்டுள்ளது.        
  •                  இந்நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள், நான்கே நான்கு தான் உள்ளன(1, 3, 4, 5). எஞ்சிய எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன; இவற்றில் எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின் இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளமை கவனிக்கத் தக்கது.
  •  வாழ்க்கையில் நன்மை தரும் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து 'இனிது' என்ற தலைப்பிட்டு அமைத்திருப்பதால் இஃது 'இனியவை நாற்பது' எனப்பட்டது. இதனை 'இனிது நாற்பது', 'இனியது நாற்பது', 'இனிய நாற்பது' என்றும் உரைப்பர்.

Share:

Friday, January 6, 2017

Thursday, January 5, 2017

இன்னா நாற்பது(பதினெண் கீழ்க்கணக்கு நூல்)


                                                             இன்னா நாற்பது 
  • கபிலர் என்னும் புலவர் இயற்றியது இன்னா நாற்பது என்னும் நூல்.
  •  நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற்றொகுதியுள் அடங்குவது. 
  • உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல். இது கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த நூலாகும். 
  • இந்நூல் இன்னிசை வெண்பாக்களால் ஆனது. இதில் நூற்று அறுபத்து நான்கு கூடாச் செயல்கள் கூறப்பட்டுள்ளன.


உதாரணம் :
  • அறிவிற் சிறந்தவர்கள் வீற்றிருக்கின்ற சபையிலே அறிவில்லாத ஒருவன் புகுவது துன்பத்தைத் தரும். 
  • இருட்டிய பின்னர் வழியிற் செல்வது பெரிதும் துன்பம் விளைவிக்கும். விளையக் கூடிய துன்பங்களைத் தாங்கக் கூடிய ஆறல் இல்லாதவர்களுக்குத் தவம் துன்பம் தரும்.
  •  தன்னைப் பெற்ற அன்னையைப் பேணிக் காப்பாற்றாமல் விடுவதும் துன்பமாகும். என்று மனித வாழ்வில் துன்பத்துக்குரிய நான்கு விடயங்களைக் கூறி நீதி புகட்டும் கீழ்க்காணும் பாடல் இந் நூலில் வருகிறது.

ஆன்றவித்த சான்றோருட் பேதை புகலின்னா
மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா
நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா வாங்கின்னா
ஈன்றாளை யோம்பா விடல்.

 இன்னா நாற்பது :
  • நாற்பது என்னும் எண் தொகையால் குறிக்கப்பெறும் நான்கு கீழ்க்கணக்கு நூல்களில் கார் நாற்பதும், களவழி நாற்பதும் முறையே அகம், புறம் பற்றியவை. 
  • இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் அறம் உரைப்பன. இவ்விரண்டும் முறையே துன்பம் தரும் நிகழ்ச்சிகளும் இன்பம் தரும் செயல்களும் இன்னின்ன எனத் தொகுத்து உரைக்கின்றன. நூலுக்குப் புறம்பான கடவுள் வாழ்த்திலும் கூட 'இன்னா', இனிதே என்னும் சொற்கள் அமைந்துள்ளன. இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு, ஒவ்வொன்றையும் 'இன்னா' என எடுத்துக் கூறுதலின் 'இன்னா நாற்பது' எனப் பெயர்பெற்றது.
  •  இந்நூலை இயற்றியவர் கபில தேவர். ஆசிரியர் தமது கடவுள் வாழ்த்தில் சிவபெருமான், பலராமன், திருமால், முருகன் ஆகியோரைக் குறித்துள்ளார். இதனால் இவர் சமயப் பொது நோக்கு உடையவர் என எண்ண இடமுண்டு.

Share:

Monday, January 2, 2017